8-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச்சான்று அவசியம் இல்லை.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!




8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்று (TC) இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 -ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 2023-ம் கல்வியாண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இனி வாரத்தில் ஒருநாள் நீதிபோதனை வகுப்புகள் நடைபெறும் என்ற அறிவிப்பானது, கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகள் அடிப்படையில் செயல்படுத்தப்படயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு முந்தைய நாள் பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட்டு ஒவ்வொரு மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பெற்றோரிடம் விவாதிக்க வேண்டும்.


8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் சேர வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்று(TC) இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும். வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு தாமதமின்றி மாற்றுச்சான்று வழங்கிட வேண்டும். இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog