துறைத்தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு




அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களுக்கு 151 துறை தேர்வுகள் இந்த மாதம் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன. அதில் 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் உரிய ஆதாரங்களுடன் இன்று முதல் ஜூலை 5ம் தேதிக்குள் contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம்வழியே ஆட்சேபனை தெரிவித்தால் ஏற்று கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog