முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.. தெரிந்துக்கொள்வது எப்படி..? முழு விவரம்..




முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது என்றும் நீட் தேர்வில் தகுதிப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


முதுநிலை மருத்துவ மேல் படிப்பிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி 267 நகரங்களில் 849 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 301 பேர் எழுதினர். இந்நிலையில் தற்போது முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில்," முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. தேர்வில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள். 10 நாட்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமைக்கு எனது பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவதற்கான இணையதள தொடர்பினை பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog