வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்: மீண்டும் மக்கள் நலப்பணியே வழங்க வேண்டும் என கோரிக்கை




ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணி வழங்காமல் ஏற்கெனவே உறுதி அளித்த பணியையே வழங்க வலியுறுத்தி வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் வேலையிழந்த தங்களுக்கு அதேபணியை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவு, பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


உச்சநீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு சார்பில் இதே உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு மக்கள் நலப்பணியாளர் பணி தான் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2011-ம் ஆண்டு அதிமுக அரசால் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பதவிநீக்கம் செய்தார். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று கோரி இவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். பணியில் இல்லாமலேயே பலரும் ஓய்வுபெறும் வயதில் இருப்பதால் பணிபலன்களை பெற ஏதுவாக மீண்டும் மக்கள் நலப்பணியாளர்கள் பணியே வழங்கவேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் 7,500 சம்பளத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி அளிக்கப்போவதாக அதிமுக அரசு தெரிவிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog