கள்ளர் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர் நியமனம்: சங்கங்கள் வலியுறுத்தல்



மதுரை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாதன் தீனன், முத்துக்குமார் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:கல்வித் துறையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 2022-2023 ல் காலியாக உள்ள 4989 இடைநிலை, 5154 பட்டதாரி, 3188 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரையான சம்பளத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. அதற்கான மாவட்டம் வாரி காலிப் பணிடங்களும் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோல் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் பள்ளிகளிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பள்ளிகளில் வசூலிக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அந்தந்த சி.இ.ஓ.,க்களிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது. இங்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. எனவே கள்ளர் பள்ளிகளிலும் காலிப் பணியிடங்களை வெளியிட்டு, அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog