மக்கள் நல பணியாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு



கரூர்,---கரூர் மாவட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார். 


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த, 2011-ம் ஆண்டு நவ., 8ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்களை, தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில், வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளது. இப்பணிக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து, 5,000 ரூபாய், கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக, 2,500 ரூபாய் என, மொத்தம், 7,500 ரூபாய் மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.


எனவே, முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளலாம்.மேலும், இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம், ஏற்கனவே பணியாற்றியதற்கான விபரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்ப கடிதத்தையும், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும், 18க்குள் வழங்க வேண்டும்.பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்பக்கடிதம் பரிசீலிக்கப்பட்டு ஜூலை, 1- முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog