அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் திறப்பு எப்போது.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!!!




நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.


அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் LKG, UKG வகுப்புகளை எப்போது தொடங்குவது, சிறப்பாசிரியர்கள் நியமனம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் ஆசிரியர் நியமனம் குறித்தும் அமைச்சர் விவாதிக்கிறார்.


Comments

Popular posts from this blog