TANCET Result: இன்று வெளியாகிறது "டான்செட் தேர்வு ரிசல்ட்"-லிங்க் இதோ!



தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) முடிவுகள் இன்று வெளியாகிறது.


தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது.



அந்தவகையில்,எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான தேர்வு மே 14, 2022 அன்று நடைபெற்றது.இதனையடுத்து,எம்.இ.,எம்.டெக்.,எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு மே 15, 2022 அன்று நடைபெற்றது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான்,முதுநிலை படிப்புகளில் சேர முடியும்.


இந்த நிலையில்,இத்தேர்வினை 36,710 பேர் எழுதிய நிலையில், TANCET தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


TANCET 2022: முடிவைப் பதிவிறக்குவது எப்படி?


https://tancet.annauniv.edu/tancetஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில், "TANCET 2022 Result" என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பி(submit) பட்டனை கிளிக் செய்யவும்.

அதன்பின்னர்,உங்கள் TANCET 2022 முடிவுகள் திரையில் தோன்றும்.

TANCET 2022 முடிவைப் பதிவிறக்கி,எதிர்காலக் குறிப்புக்காக அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog