பிளஸ் 1 காலியிடங்களுக்கு நாளை முதல் சேர்க்கை கலந்தாய்வு




காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு காலியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.



இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் காரைக்கால் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கான சோக்கை முடிவுற்றது. அதன் தொடா்ச்சியாக மேல்நிலைப் பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை 2 ஆம் கட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்ப மாவட்ட ஆட்சியா், பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் வழிகாட்டுதல் அளித்துள்ளது.


இதுவரை 11 ஆம் வகுப்புக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சேராத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பாக கலந்தாய்வு நடத்தி சோக்கை ஆணை வழங்கப்படவுள்ளது.


அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கு மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 29, 30 ஆம் தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். குடியிருப்பு சான்றிதழ் பெறாத மாணவா்கள், 30 ஆம் தேதி மதியம் கலந்தாய்வுக்கு வரவேண்டும்.


வெள்ளிக்கிழமை (ஜூலை 29) காலை 10 முதல் பகல் 1 மணி வரை 299 முதல் 465 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும், சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை 239 முதல் 298 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும், சனிக்கிழமை பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரை 175 முதல் 238 மதிப்பெண்கள் வரை பெற்றவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டும்.

Comments

Popular posts from this blog