10ஆம் வகுப்பு துணைத்தேர்வு; வரும் 22ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்!




10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை வரும் 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


'ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை வரும் 22ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப்பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப்பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அறிவியியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்களால் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடத்தப்படும் 10ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வர்கள் முன்கூட்டியே செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.


10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வுகால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog