1089 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..




தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.


குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி தற்போது நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விருப்பதும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



பதவியின் பெயர் : நில அளவர், வரைவாளர் , அளவர்/ உதவி வரைவாளர்.

மொத்த காலியிடங்கள்: 1089

நில அளவர் - 794 +4

வரைவாளர் - 236

அளவர்/ உதவி வரைவாளர். - 55


சம்பளம் - மாதம் ரூ.19500-71900/


அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் - 29.07.2022


விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.08.2022


தேர்வு நடைபெறும் நாள் - 06.11.2022


தேர்வு முறை - கணினி வழித் தேர்வு ( Online Exam)


கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


நில அளவர்/வரைவாளர் - 01.07.2022 அன்று 32 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும் .


அளவர்/ உதவி வரைவாளர் - 01.07.2022 அன்று 37 வயதுக்கும் கீழ் இருக்க வேண்டும்.


ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர், சீர்மரபினர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை .


தேர்வுக் கட்டணம்: ரூ. 100 ; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150


மேலும், ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.


தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கான4% இட ஒதுக்கீடு உள்பட பிற இடஒதுக்கீட்டு விதிகளும் பின்பற்றப்படும்.


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog