2,381 சிறப்பு ஆசிரியர்களுக்கு காலிபணியிடங்கள் நியமனம்.! கல்வித்துறை இயக்குநர் தகவல்.!



அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; 2,381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் பணிகளை தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பணி மாறுதல் வழங்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த பின்னர் 2021-ம் மே மாதத்திற்கு பின்னர் அரசுப்பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பணியிட மாற்றத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


2,381 அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் LKG,UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரையில், அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் கொண்டு சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். 3 வயதிற்கு மேல் LKG-யிலும், 4 வயதிற்கு மேல் UKG-யிலும் சேர்த்திட வேண்டும். பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழந்தைகளாக அந்தப் பணியாளர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.


அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள வளங்களைக் கொண்டு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Comments

Popular posts from this blog