இன்னும் குரூப் 4 ஹால்டிக்கெட் டவுன்லோட் பண்ணவில்லையா?...




தேர்வு எழுதுபவர்கள் கடைசி வரை காத்திருக்காமல் இப்பவே டவுன்லோட் செய்யுங்க...! டவுன்லோட் செஞ்ச ஹால்டிக்கெட்டை தேர்வு முடிஞ்சதும் தூக்கி வீசிடாதீங்க...



அதான் தேர்வு எழுதிட்டோமே, அதற்கு அப்புறம் எதுக்கு ஹால்டிக்கெட்னு கேக்கிறீங்க..!


அடுத்த கட்ட தேர்வுக்கு தெரிவு செய்யப்படும் நபர்களிடம், ஹால்டிக்கெட்டை தேர்வாணையம் கோரலாம் என்பதையும் தயவு செய்து மறக்காதீங்க.



ட்வுன்லோட் ஈஸி

www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்கு பர்ஸ்ட் போங்க.


அப்புறம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.


திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதிச்சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. ஆகையால், மேற்குறிப்பிட்ட முறையில் டவுன்லோட் செஞ்சு, பத்திரமாக வைச்சுக்கோங்க...!



அவசியம்

அனுமதி சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற


வேண்டும். அனுமதி சீட்டு இல்லாதவர்கள் தேர்வு கூடத்திற்குள் நுழைய கூட முடியாது என்பதையும் நினைவில் வச்சுக்கோங்க.



எடுத்துட்டு போகனும்

தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை/வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஜெராக்ஸை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.



ஹால்டிக்கெட்டில் பிரச்னை?

அனுமதி சீட்டில் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தோற்றத்துடன் பொருத்தவில்லை என்றாலோ, கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் உங்களது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிசீட்டின் ஜெராக்ஸ் மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(Passport)/ஓட்டுநர் உரிமம் / நிரந்தரக்கணக்கு அட்டை(PAN card) / வாக்காளர் அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஜெராக்ஸை இணைத்து, அதனை தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்வர்கள் அனுமதிச்சீட்டினை தங்களது பாதுகாப்பில் நிரந்தரமாக வைத்துக்


கொள்ளவேண்டும். தேர்வர்கள், தங்களது அனுமதிச்சீட்டினை அடுத்த கட்ட


தேர்வுக்கு (கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு) தெரிவு செய்யப்படும் நேர்வுகளில் தேர்வாணையத்தால்


கோரப்படுகின்ற நேர்வுகளில் சமர்ப்பிக்க


வேண்டும்.



மாற்றம் இருக்குங்க

நாளை நடக்கவுள்ள தேர்வுக்கான தேர்வு மையங்களில், சென்னையில் உள்ள ஒரு பகுதி தேர்வு மையம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பதை, தேர்வாணைய தளத்தில் போய் மறக்காமல் பாருங்க...


அப்ப தான் சரியான நேரத்துக்கு, சரியான தேர்வு மையத்திற்கு போய் கூலா தேர்வு எழுதிட்டு வர முடியும். 'ஆல் தி பெஸ்ட்'

Comments

Popular posts from this blog