வேளாண் இளங்கலை படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்





கோவை:மாணவர்களின் வசதிக்காக பி.எஸ்சி., வேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை, ஆகஸ்ட் 10 வரை வேளாண் பல்கலை நீட்டித்துள்ளது.



கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக் கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.எஸ்சி., வேளாண் படிப்பின் கீழ், 12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், 4,485 இடங்கள் உள்ளன. 2022 - 23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை பல்கலை நிர்வாகம் துவக்கியது. மாணவர்கள், http://tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர்.


நேற்று முன்தினம் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, வேளாண் பல்கலை அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மாணவர்களின் வசதிக்காக, ஆகஸ்ட் 10 வரை அத்தேதியை நீட்டித்து வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.இதுவரை, 34 ஆயிரத்து 564 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog