டி.ஆர்.பி., தேர்வுகளில் தமிழ்த் தாள் கட்டாயம்! பள்ளிக்கல்வி துறை முடிவு




ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் கட்டாய தாள் கொண்டு வர பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே, தமிழக பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் வகையில், டி.ஆர்.பி., தேர்வுகளில் தமிழ் கட்டாய தாள் அறிமுகம் செய்ய, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் கட்டாயத்தாள் ஏற்கனவே அமலில் உள்ளது. அதை பின்பற்றி, டி.ஆர்.பி.,யும் தமிழ் தாளை கட்டாயமாக்கும் அறிவிப்பை, விரைவில் வெளியிடும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments

Popular posts from this blog