சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசியர்கள் பணி; வலுக்கும் எதிர்ப்பு





சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


சென்னை மாநகராட்சியில் 119 தொடக்கப்பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.53% ஆக இருந்தது. 32 உயர்நிலைப் பள்ளிகளில், கிட்டத்தட்ட 13 பள்ளிகள் 90%க்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றன. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடநெறிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றனர்.



இந்நிலையில், சென்னை பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதில், சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆசியர்கள் பற்றாக்குரை, கல்வியின் தரம், தேர்ச்சி விகிதம், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலசோனையின் முடிவில், மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள்.



இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தில், "மாநகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமன செய்வதற்கு வழிவகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ(எம்) உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக முறையை ரத்து செய்ய வேண்டும். இது, முறைகேடான பண பரிவர்த்தனைக்கு வழி வகுக்கும். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கும் பொது தான் கல்வியின் தரம் அதிகரிக்கும் என்று வெளிநடப்பு செய்த சிபிஐ கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog