தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்பாத பட்டதாரிகள்..




தற்கால ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மொத்தமுள்ள 11,825 இடங்களில் இதுவரை 2,221 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.



தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50, 648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், தற்காலி ஆசிரியர் பணியில் சேர பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேரும் என 2,221 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் இன்னும் 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.


இதன்மூலம், பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர் பணியில், சேர ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த பட்டதாரிகள் விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.


தனியார் பள்ளியில் அளிக்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவும், வேலை பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் பணியில் சேர்வதற்கு பெரும்பான்மையினர் ஆர்வம் காட்டவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog