விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்!! அமைச்சர் திட்டவட்டம்!!




தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில் ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரின் ஆணைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது.


நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது குறித்த வழுகாட்டும் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி, மத, பொது கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog