தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் 





விழுப்புரம்-தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்னகுமார் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக்குவினால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர படிப்புகளுக்கு 2022-23ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.



மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதி மற்றும் கட்டணம் தொடர்பான விபரங்களை www.tnou.ac.in என்ற பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கல்வி பயில விரும்புவோர் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையங்களான விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்துார், மதுரை, சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகியவற்றில் சேர்க்கைக்கான வசதியை பெறலாம்.அரசு விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவை 04146 290567, 93459 13380 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog