NEET UG 2022: நீட்தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்




நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.



நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும்.


விண்ணப்பதாரர்கள் (வழக்கம் - வழக்காறு/ கலாச்சாரம்/ சமயம்) சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


தேர்வு நேரம் - பிற்பகல் 2 முதல் 05.20 மணி வரை. நாள்: 17.07.2022


தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


இந்த ஆண்டு நீட்த் தேர்வு இந்தி , தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகின்றது.வரும் 17ம் தேதி நடக்கவுள்ள தேர்விற்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog