TRB Polytechnic Recruitment: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள்: போலித்தகவல்களை நம்ப வேண்டாம் - டிஆர்பி அறிவிப்பு



பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசு‌ பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, கணினி வழித்‌ தேர்வுகள்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌

வெளியிடப்பட்‌டன.


11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை/ ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌/ ஆவணங்களின்‌ அடிப்படையில்‌ பணிநாடுநர்களின்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப் பிரிவுகளுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ தயார்‌ செய்யப்பட்டு, ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


அதன்‌ மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள்‌ மீதும்‌ ஆணைகள்‌ பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது, முதற்கட்டமாக Textile Technology, Production Engineering, Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematic ஆகிய பாடங்களில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்புப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு 16.07.2022 தேதியில்‌ நேரடி சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான பல்தொழில்நுட்ப கல்லூரிகளில்‌ 1,060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு நோடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 12.7.2022 அன்று அசல்‌ சான்றிதம்‌ சரிபார்ப்பு‌ தொடர்பான பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. இப்பணித்‌ தெரிவு சார்ந்து நேர்காணல்‌ எதுவும்‌ கிடையாது.


பணிநாடுநர்கள்‌ போட்டி எழுத்துத் தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, கூடுதல்‌ கல்வித்‌ தகுதிக்கான மதிப்பெண்கள்‌ மற்றும்‌ பணி அனுபவச்‌ சான்றின்‌ மதிப்பெண்களின்‌ அடிப்படையிலேயே சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு பணிநாடுநர்கள்‌ தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடைபெற உள்ளது.


நேர்முகத்‌ தேர்வுகள்‌ எதுவும்‌ கிடையாது என பணிநாடுநர்களுக்கு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. பணிநாடுநர்கள்‌ வேறு விதமான தகவல்கள்‌ எதையும்‌ நம்ப வேண்டாம்‌ என்றும்‌ மீண்டும்‌ அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog