TN TRB Polytechnic Lecturer: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: தேர்வானோர் பட்டியலை வெளியிட்ட டிஆர்பி




கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், மின்னணு பொறியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களின் பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது.


தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசு‌ பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, கணினி வழித்‌ தேர்வுகள்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்‌டன.


11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை/ ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌/ ஆவணங்களின்‌ அடிப்படையில்‌ பணிநாடுநர்களின்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப் பிரிவுகளுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ தயார்‌ செய்யப்பட்டு, ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்‌ மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள்‌ மீதும்‌ ஆணைகள்‌ பிறப்பிக்கப்பட்டன.


முதற்கட்டமாக Textile Technology, Production Engineering, Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematic ஆகிய பாடங்களில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்புப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு நேரடி சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.


இந்நிலையில் கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், மின்னணு பொறியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்களின் பட்டியலை டிஆர்பி எனப்படும் ஆசிரியர்‌ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.






Comments

Popular posts from this blog