TNPSC குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு?





TNPSC Group 4 Exam 2022 cut off mark details here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.



இந்த குரூப் 4 தேர்வில் தமிழ் பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க நேரம் போதவில்லை என சில தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தமிழ் பகுதி எளிதாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ் கட்டாய பாடமாக மாற்றியுள்ளதால், இதற்கு முன்னர் வரை ஆங்கிலம் படித்தவர்களும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் தமிழ் எளிதாக கேட்கப்பட்டிருந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


கணிதப் பகுதியில் 25 வினாக்களில் ஒரு சில வினாக்களைத் தவிர அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. சில வினாக்கள் கணித அடிப்படை பண்புகளை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்தது. அதாவது தேர்வர்களை குழப்பும் வகையில், ஆனால் எளிதாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்தது. சில கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்து. அதிக நேரம் தேவைப்பட்டது. சில கேள்விகளை நன்கு புரிந்த கொண்ட பின்னரே பதில் அளிக்கும் வகையில் இருந்தது. நேரடியாக பதில் அளிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்தாலும், இந்த முறை புதிய முறையாக விடைகளை பார்த்து புரிந்துக் கொண்டப் பின்னரே விடையளிக்கும் வகையில் இருந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஒட்டுமொத்தமாக, தேர்வு ஆவரேஜ் ஆக இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.


இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மாற்று திறனாளிகளுக்கு 140 - 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம்.


இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.


அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.


இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.


Comments

Popular posts from this blog