செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர்..!!



அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதன்படி நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


முதல்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (ஆக. 25) தொடங்கி அக். 23-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.


இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, "பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் பொதுப்பிரிவு கலந்தாய்வு நான்கு கட்டங்களாக செப்டம்பர் 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடைபெறும்.


அதன்பின் செப்டம்பர் 25-ம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக மூன்று நாட்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து அக்டோபர் 13 முதல் 15 வரை மூன்றாம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும்" என்று கூறினார்.


Comments

Popular posts from this blog