பொறியியல் மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்




பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 22,000பேர் விண்ணப்பித்துள்ளனர் .கடந்த ஆண்டை விட 5 ,000 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . இவர்களில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் எண்ணிக்கை 22 ,000 என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 17,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 5,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், 11,000 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆண்டு 7000 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த ஆண்டு கூடுதலாக இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog