சப்-கலெக்டர், டிஎஸ்பி உள்பட 92 இடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்



துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது.


சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்பட பல்வேறு துறைகளில் 92 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதல் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.


கடைசி நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 11.59 மணி வரை தேர்வர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக டிஎன்பிஎஸ்சி வெளியிடும். தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக குரூப் 1 மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி பின்னர் அறிவிக்கும்.




Comments

Popular posts from this blog