இன்று வெளியாகிறது கல்லூரி மாணவர் தரவரிசைப் பட்டியல்!!




கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .



2022- 23ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.


இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது. மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும்.



பி.ஏ தமிழ் இலக்கியம்/ பி.லிட் போன்ற படிப்புகளுக்கான தமிழ் தரவரிசைப் பட்டியல், 12ஆம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும். அதேபோன்று, பி.ஏ. ஆங்கில இலக்கிய சேர்க்கைக்கான ஆங்கில தரவரிசைப் பட்டியல், 12ஆம் வகுப்பில் ஆங்கில பாடநெறியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.


B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W போன்ற இதர அனைத்து பாடங்களுக்கான பொது தரவரிசைப் பட்டியல், 12ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் தவிர மீதமுள்ள நான்கு பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும்.


TNGASA விண்ணப்ப செயல்முறையின் போது, தாங்கள் தேர்வு செய்த விருப்ப கல்லூரிகள் மற்றும் பாடநெறிகள் அடிப்படையில் தரவரிசைக்கு ஏற்றவாறு அந்தந்த கல்லூரிகள் ஒதுக்கீடு ஆணை வழங்கும். இந்த ஒதுக்கீடு ஆணையின் அடிப்படையில், அந்தந்த கல்லூரிகளுக்கு சென்று தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog