பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு!!



பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியாகிறது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் படிப்பில் சேர்வதற்கு உயர்கல்வி துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க ஒன்று புள்ளி 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்று காலை 10:30 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது.


இதில் விளையாட்டு பிரிவு ,மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டிலும் முதற்கட்ட கவுன்சிலிங் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளின் 7.5% ஒதுக்கீட்டின்படி 20, 000 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு 23ஆம் தேதி முடிவடைகிறது. வருகிற 25ஆம் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. மொத்தம் 4சுற்றுக்களாக அக்டோபர் 21ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அக்.22 மற்றும் 23 ஆம் தேதிகளில் துணை கலந்தாய்வு நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog