புதிய அறிவிப்பு!! இணைய வழியில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு!!




அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் அறிவித்துள்ளது.



அதன்படி தகுதி தேர்வை நடத்தும் தேர்வு முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. அதனால் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டது. கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. சுமார் 4.5 லட்சம் பேர் இந்த TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தற்போது தேர்வு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்தாண்டு முதல் முறையாக TET தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு இணையவழி பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



ஆகஸ்ட் 7 ம் தேதி TET முதல் தாள் தேர்வு நடைபெற இருந்த நிலையில், சில நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 10ஆம் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நடைபெற உள்ள இணையவழி பயிற்சி தேர்வில் 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதில் தேர்வர்கள் 30 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ஒரு கேள்விக்கு 4 ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும் அதில் ஒரு பதிலை தேர்வர்கள் கிளிக் செய்ய வேண்டும். இந்த கணினி வழி தேர்வில் தேர்வர்கள் தேர்வர்கள் தங்கள் விருப்பம் போல் எந்த பகுதி வினாவிற்கும் பதிலளிக்கலாம். மேலும் தேர்வு நேரம் முடிவதற்குள் தேர்வர்கள் தங்கள் விடையை வேண்டுமானால் மாற்றியமைத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog