டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் தேர்வர்கள் கோரிக்கை





டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பழைய நிலையையே கடைபிடிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை என நடத்தப்பட்ட தேர்வுகள் தற்போது 9.30 மணி முதல் 12.30 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் கொள்குறி வகை வினாக்களில் ஏ,பி,சி,டி என விடை இருந்த நிலை தற்போது ஏ,பி,சி,டி,ஈ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதனால் தேர்வர்கள் பதட்டமடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது, 'கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல மாணவர்கள் சரியாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க வேறு வழிமுறைகளை கையாள முன்வர வேண்டும். எனவே, தேர்வு நேரத்தை பழைய முறையிலும், விடை ஈ-ஐ நீக்கவும் நீக்க தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும்' என்றார்.

Comments

Popular posts from this blog