தமிழக அரசில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள்



தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.



இதனால் முறைகேடாக ஊழியர்கள் நியமனம் செய்வது தடுக்கப்படும் என்று அரசுஅறிவித்த நிலையில் நேரடி நியமனம் மற்றும் தேர்வு மூலம் நியமிக்கப்படும் அனைத்து வகையான நியமனங்களும் வெளிப்படை தன்மையுடன் இருக்கின்றது.


இந்நிலையில் தமிழக அரசில் காலி பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு துறையில் தற்போது 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்து வருடங்களுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் வைத்துவிட்டு அவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


இது ஒரு வகையான ஆட்குறைப்பு நடவடிக்கைதான். இதன் காரணமாக 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக இருக்கும் அனைவரும் வேலை இழக்க கூடிய நிலை உருவாகும். இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். எனவே தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை தற்போது உடனடியாக நிரப்ப வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு பணியில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த அறிவிப்பு அரசு பணிக்காக காத்திருப்போர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Comments

Popular posts from this blog