விழுப்புரத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுகளை சரிபார்க்க அறிவுறுத்தல்




விழுப்புரம்மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்துள்ள இளைஞா்கள் தகவல்கள் சரியாக உள்ளதாக என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட தா, மோகன் அறிவுறுத்தியுள்ளார்.



விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் 2019ம் ஆண்டு பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சிக்கென்று தனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் புதிதாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய உயிா்ப் பதிவேட்டிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள்பட்ட பதிவுதாரா்களின் தரவுகள் கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு ஏற்கெனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் பதிவுதாரா்கள் தங்களது பதிவு விவரங்களை வேலைவாய்ப்பு இணையதள

முகவரியில் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.


இந்தப் பதிவுகளில் ஏதேனும் விடுபாடுகளோ, குறைகளோ காணப்பட்டால் அலுவலக வேலை நாள்களில் வேலைவாய்ப்பு பதிவு அட்டை, அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து சரிசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தா.மோகன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog