திட்டமிட்டபடி நாளை காலாண்டு தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!



புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் நாளை தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.



புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன், நாளை (செப்.26-ம் தேதி) முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது. ஆனால், புதுவையில் நாளை ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகளும் நாளை தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒரு வாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ம் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog