தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்




தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.



இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சிதம்பரத்தில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.ரவி தலைமை வகித்தாா். ஆசிரியா் ஜி.பாண்டியன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் சிறப்புரையாற்றினாா்.



ராமகிருஷ்ணா பள்ளி நிா்வாகி எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், தொழில்கல்வி ஆசிரியா்கள் சங்க மாநில நிா்வாகிகள் எஸ்.ரங்கநாதன், எஸ்.திருநாவுக்கரசு, டி.சிவகுமாா், து.ராமமூா்த்தி, த.பாலு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், நல்லாசிரியா் விருது பெற்ற பண்ருட்டி எஸ்.மோகன்குமாா், பரங்கிப்பேட்டை ஜி.உதயகுமாா் மற்றும் பணி நிறைவு பெற்ற தொழில் கல்வி ஆசிரியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப் பட்டது. 


சிறப்பு அழைப்பாளராக இயக்கத்தின் மாநில அமைப்பாளா் செ.நா.ஜனாா்த்தனன் பங்கேற்று பேசினாா். பின்னா்செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக அரசு பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கியதற்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம். 


தமிழ்நாட்டில் காலியாக உள்ள 600-க்கும் மேற்பட்ட தொழில்கல்வி ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வேளாண் அறிவியல், தணிக்கையியல், அடிப்படை இயந்திரவியல், மின்னணு, மின்னணுவியல் போன்ற ஏதேனும் ஓா் தொழில்கல்வி பாடத்தை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

Comments

Popular posts from this blog