பள்ளிக் கல்வித் துறைக்கு மீண்டும் இயக்குநர் பணியிடம்-திண்டுக்கல் லியோனி கோரிக்கை




பள்ளிக் கல்வித் துறை மீண்டும் நன்றாக செயல்பட வேண்டுமென்றால், இயக்குநர் பணியிடத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே திண்டுக்கல் லியோனி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழாவில் பேசிய அவர் கூறுகையில், 'நானும் ஆசிரியராக இருந்தவன். ஆசிரியர்களின் கோரிக்கையான பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்தால்தான் பள்ளிக் கல்வித் துறை மீண்டும் நன்றாக செயல்படும். மேலும், கற்பித்தல் பணியை விட பதிவேடுகள் பராமரிக்கும் பணிகள்தான் ஆசிரியருக்கு அதிகம் உள்ளது. அதை குறைத்திட வேண்டும்' என்றார்.


இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவதே அரசின் தலையாயக் கடமை' என்றார்.


ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? இயக்குநர் பணியிடம் கொண்டு வரப்படுமா? என்ற ஆசிரியர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில் எதையும் அமைச்சர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog