ஆயுதப்படையில் 24,369 பணியிடங்கள் - பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு



ம த்தியப் படைகளில் கான்ஸ்டபிள்/ரைபிள்மேன்/ சிப்பாய் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.



இந்த அறிவிப்பில், பல்வேறு ஆயுதப் படைகளில் 24,369 பணியிடங்கள் நிரப்பப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


பணியிட விவரங்கள்:


பகுதி-1:


எல்லைப் பாதுகாப்புப் படை (BSF): 10,497 (ஆண்கள்- 8,922, பெண்கள்-1,575).


மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF): 100 (ஆண்கள் – 90, பெண்கள் – 10).


மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF): 100 (ஆண்கள் – 90, பெண்கள் – 10).


மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF): 8,911 (ஆண்கள் -8,380, பெண்கள் – 531).


சஷாஸ்த்ரா சீமா பால் (SSB): 1,284 (ஆண் -1,041, பெண்- 243).


இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP): 1,613 (ஆண் -1,371, பெண்- 242).


அசாம் ரைபிள்ஸ் (AR): 1,697 (ஆண்கள் – 1,697).


செயலக பாதுகாப்புப் படை (SSF): 103 பதவிகள் (ஆண் – 78, பெண் – 25).


பகுதி-2:


போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (SSB): 164


தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஆண் விண்ணப்பதாரரின் உயரம் 170 செ.மீ. பெண் வேட்பாளர்களுக்கு 157 செ.மீ.க்கு குறைவாக இருக்கக்கூடாது.


வயது: ஜனவரி 1, 2023 தேதியின்படி 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 2000க்கு முன்பும், ஜனவரி 1, 2005க்குப் பிறகும் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. (SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC களுக்கு 3 ஆண்டுகள்)


தேர்வு: கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு நடைமுறை:


வினாத்தாள் 80 மதிப்பெண்களைக் கொண்டது.


ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மதிப்பெண்கள்.


பொது அறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு மற்றும் பொது விழிப்புணர்வு, தொடக்கக் கணிதம், ஆங்கிலம்/இந்தி தலைப்புகளில் இருந்து கேள்விகள் இருக்கும். தேர்வின் காலம் 60 நிமிடங்கள். நெகட்டிவ் மார்க் சிஸ்டம் இருக்கும்.


விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: நவம்பர் 30, 2022.


ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: டிசம்பர் 1, 2022.


கணினி அடிப்படையிலான தேர்வு தேதி: ஜனவரி, 2023.


இணையதளம்:https://ssc.nic.in/

Comments

Popular posts from this blog