சுகாதாரத்துறை பணியிடம் - தமிழ் தேர்வு கட்டாயம்





தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என அறிவிப்பு. தமிழக சுகாதாரத்துறை சார்பில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிட தேர்வுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மருத்துவ பாட திட்டத்தை தொடர்ந்து தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்றும் வரும் 25-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog