அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே தொடர்ந்து நியமிப்பது ஏன்? மநீம கேள்வி



அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை தொடர்ந்து நியமனம் செய்வது ஏன் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது


இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்கேஜி யுகேஜி போன்ற வகுப்புகள் முன்னர் செயல்பட்டு வந்தன என்றும், ஆனால் அந்த வகுப்புகளை மூடிவிட முடிவு செய்யப்பட்டது என்றும், ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் ரூபாய் 5000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்து பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏன் என்ற கேள்வியை மக்கள் நீதி மய்யம் கட்சி எழுப்பியுள்ளது 


குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும் என்றும் எனவே தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog