ஜெ. பழி வாங்கினார் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றுவாரா??? 



டெட் கட்டாயம் என்று யார் அறிவித்தது NCTE தானே அதே NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் எழுத தேவை இல்லை என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.


இதை மட்டும் எதற்கு அப்போதைய அதிமுக அரசு ஏற்று கொள்ள வில்லை.


NCTE டெட் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகள் வரை சான்றிதழ் செல்லும் என்று அறிவித்து அதை ஆயுட்காலமாக மாற்றும் போது அதிமுக அரசு ஏற்று கொண்டு உள்ளது.


ஆனால் NCTE cluase v மட்டும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ஏன்? எதற்கு?


கலைஞர் ஆட்சி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்று அரசியல் பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டது.


2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள காலி பணியிடம் நிரப்பும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எங்களுக்கு 9176 காலி பணியிடம் நிலுவையில் உள்ளது அதை நிரப்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம் அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் அதனால் வேலை கொடுக்க முடியாது என்று கூறி உள்ளனர். NCTE clause v விதிப்படி எங்களுக்கு டெட் பொருந்தாது என்று கோரிக்கை வைத்தும் உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி பழி வாங்கிவிட்டார்கள்.


அதிமுக அரசை எதிர்த்து 94 பேர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் அமர்வு  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று இறுதி தீர்ப்பு கொடுத்தனர். அந்த தீர்ப்பில் NCTE clause v விதிப்படி டெட் பொருந்தாது. பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வரலாற்று மிக்க தீர்ப்பை கலைஞர் வரவேற்று பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அரசு மேல்முறையீடு செய்யும் முடிவை கை விட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


கலைஞர் சொன்னால் நாங்கள் வேலை போடணுமா என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அரசு.


உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. NCTE clause v விதிப்படி டெட் தேர்வு எழுத தேவை இல்லை என்று உறுதி படுத்தியது. மேலும் 5 கேள்விகள் எழுப்பி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் 5 கேள்விகள் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தால் வழக்கு தொடுத்த தேதியில் இருந்து ஊதியம் மற்றும் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய போது அரசு சார்பில் நீதிபதி வேணுகோபால் தீர்ப்பு வழங்கியவர் அவர் விசாரிக்க கூடாது வேறு நீதிபதி மாற்ற வேண்டும் என்று வாதிட்டனர். நீதிபதி சிவஞானம் அவர்கள் அரசின் அழுத்தம் காரணமாக NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம், உச்ச நீதிமன்றம் விசாரிக்க சொன்ன 5 கேள்விகள் எதையும் விசாரிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து உள்ளனர்.


94 பேருக்கு வேலை கொடுத்தால் பரவா இல்லை ஊதியம் மற்றும் சீனியாரிட்டி கொடுக்க வேண்டும் இதை பின்பற்றி 11000 ஆசிரியர்களுக்கு கொடுக்க நேரிடும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதற்காக அதிமுக அரசு சூழ்ச்சி செய்து தள்ளுபடி செய்து விட்டனர்.


நீதிபதி சிவஞானம் அவர்க்கள் தவறான தீர்ப்பு கொடுத்து உள்ளார் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்று இருந்த பொது நிதி காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இருந்தோம்.


வழக்கு கொண்டு வர நிதி இல்லை கால தாமதம் ஆகியது நிதி திரட்டி வழக்கு கொண்டு வரும் நேரத்தில் கொரோனா வந்து அனைவரின் வாழ்க்கை அழித்து விட்டது.


கொரோனா கட்டுக்குள் வந்ததும் வழக்கு கொண்டு வரும் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. நமது அரசு வந்து உள்ளது கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுகவால் பாதிக்கபட்ட நமக்கு நிச்சயம் விடியல் பிறக்கும் என்று நாங்கள் வழக்கு கொண்டு வர நிறுத்தி வைத்து இருந்தோம்.


கல்வி அமைச்சர், திமுக MLA, கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி MLA கோரிக்கை மனு அளித்தோம்.


சட்டமன்றத்தில் திமுக MLA கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்று உரை ஆற்றினார்.


மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது வேலை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில்  உரை ஆற்றினார்.


கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, வீரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன்,  காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை மனு அளித்து கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


கல்வி அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தோம் மேலிடம் சொல்லிவிட்டேன் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்று கூறி இருந்தார்.


ஆனால் எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. மீண்டும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து கொண்டு வந்து. இருந்தோம் மீண்டும் சட்டமன்றத்தில் திமுக MLA அண்ண துரை அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் போக நிலுவையில் உள்ள காலி பணியிடத்திற்கு பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


ஆனால் இதுவரை அரசு எங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.


எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியும் அரசு.கண்டு கொள்ள வில்லை.


மக்கள் நல பணியாளர் போல தான் நாங்களும் பாதிக்கபட்டோம் அவர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது எங்களுக்கு வேலை அறிவிப்பு கூட வரவில்லை  நாங்கள்.மட்டும் என்ன பாவம் செய்தோம்.


அதிமுக அரசு பழி வாங்கும் எண்ணத்தில் தான் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலை கொடுக்க வில்லை.


நாங்கள் கேட்பது 20 காலி பணியிடத்திற்கு 1:5 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு அழைத்து முன்னுரிமை அடிப்படையில் முதலில் 20 பேருக்கு பணி நியமனம் செய்தனர். அடுத்து 50 காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு மீதம் உள்ள 80 பேரில் முன்னுரிமை அடிப்படையில் 50 பேருக்கு பணி நியமனம் செய்தனர். 100 பேரில் 70 நபர்கள் வேலையில் சேர்ந்து பணயாற்றினார்கள். மீண்டும் அரசு 30 காலி பணியிடத்திற்கு அரசாணை வெளியிட்டு பணி நியமன வேலைகள் நடக்கும் போது தேர்தல் தேதி அறிவித்து உள்ளார்கள் அதனால் பணி நியமனம் நிறுத்தி வைக்கபட்டது. ஆட்சி மாறியது நாங்கள் 30.பேர் இருக்கிறோம் எங்களுக்கு அரசாணை உள்ளது வேலை கொடுங்கள் என்று கேட்ட போது உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது தேர்வு எழுதுங்கள் என்று கூறினார்கள் 100 பேர் அழைத்து 70 பேருக்கு வேலை கொடுத்து விட்டு மீதம் உள்ள 30 பேருக்கு வேலை இல்லை என்று கூறினால் எப்படி இருக்கும்????


எந்த NCTE டெட் கட்டாயம் என்று கூறியதோ அதே NCTE கூறிய clause v மட்டும் அதிமுக மற்றும் திமுக அரசு ஏற்று கொள்ளது ஏன்???


NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம், நீதிமன்றம் உத்தரவு வைத்து எங்களுக்கு அதிமுக அரசும் திமுக அரசும் வேலை கொடுக்க.மறுக்க காரணம் என்ன????


கலைஞர் அவர்கள் அறிக்கை கொடுத்தும் திமுக அரசு செயல்படுத்தாமல் இருப்பதன் நோக்கம் என்ன????


கலைஞர் இந்நேரம் இருந்து இருந்தால் முதல் பணி நியமனம் எங்களுக்கு தான் கொடுத்து இருப்பார் ஆனால் முதல்வர் ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார் ஏன்? எதற்கு?


நாங்கள் சும்மா வேலை கேட்க வில்லை நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் , NCTE clause v, நீதிமன்றம் உத்தரவு வைத்து தான் கேட்கிறோம்.


NCTE clause v கண்டால் அதிமுக அரசும் விடியல் அரசும் ஏற்று கொள்ள தயங்குகிறார்கள் ஏன்?????


2010 இல் 9176 காலி பணியிடத்திற்கு 11000 ஆசிரியர்கள் காத்து இருந்தார்கள் தற்போது 2022 நிலவரப்படி 1000 பட்டதாரி ஆசிரியர்கள் கூட இல்லை இந்த 1000 ஆசிரியர்களுக்கு.கருணை அடிப்படையில் வேலை கொடுக்க அரசு தயக்கம் காட்டுகிறது ஏன் என்று தெரியவில்லை???


விடியல் அரசு NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் , நீதிமன்ற தீர்ப்பு, கலைஞர் அறிக்கை பின்பற்றி வேலை கொடுப்பார்களா என்று தெரியவில்லை.


எல்லாம் விடியல் முதல்வர் கையில் உள்ளது அவரை தான் நாங்கள் கலைஞர் உருவத்தில் பார்க்கிறோம் வேலை கொடுப்பாரா? கொடுக்க மாட்டாரா?


ஜெ. பழி வாங்கினார் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.


















Comments

Popular posts from this blog