ஏமாற வேண்டாம்.. ஆன்லைன் வழியாக பிஎச்டி படித்தால் செல்லாது.. யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு



ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மாணியக்குழு அறிவித்துள்ளது.


அதேபோல உயர்கல்வி நிறுவனங்கள் பிஎச்டி பட்டங்களை வழங்குவதற்கு யுஜிசி விதிமுறைகளையும் அதன் திருத்தங்களையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


ஆன்லைன் வழியாக கல்வி பரவலாகி வரும் நிலையில், யுஜிசி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஆன்லைன் கல்வி

 

கல்வி அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இணைய வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழிக் கல்விக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அதற்கேற்றார் போல அதிக தொகையும் வசூலிக்கப்பட்டது. பட்டப்படிப்பு, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு என எல்லாவற்றையும் ஆன்லைன் வழியிலேயே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து பிஎச்டி படிப்பையும் இவ்வாறே தொடர முடியும் என சில கல்வி நிறுவனங்கள் விளம்பரம் கொடுத்திருந்தன.


விளம்பரங்கள்

 


அதற்காக மாணவர்களிடமிருந்து பெரும் தொகையும் வசூலிக்கப்பட்டது. இது குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்தன. இந்நிலையில் தற்போது யுஜிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் வழியில் பிஎச்டி (PhD) படித்தால் அது செல்லாது என்றும், இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிஎச்டி பட்டங்களை வழங்குவதற்கு யுஜிசி விதிமுறைகளையும் அதன் திருத்தங்களையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


திருத்தங்கள்

 


இது குறித்து 'எம்ஃபில், பிஎச்டி பட்டங்கள் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறையை' திருத்தி வெளியிட்டுள்ள யுஜிசி, பிஎச்டி படிப்புகளுக்கான சேர்க்கையில் மொத்த இடங்களில் 60 சதவிகிதத்தை UGC-NET அல்லது JRF தேர்வுகள் மூலம் நிரப்பப்பட வேண்டும். மீதமுள்ள 40 சதவிகித இடங்கள் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே உயர்கல்வியில் சில திருத்தங்களை மேற்கொண்ட யுஜிசி ஒரே நேரத்தில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்களை பெற முடியும் என்று கூறியிருந்தது.


அறிவிப்பு

 


ஆனால் இது இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்(certificate courses) ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை அடிப்படையாக கொண்டு சில தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் வழி பிஎச்டி (PhD)க்கு அட்மிஷன் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இச்சூழலில் தற்போது யுஜிசி மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


PhD படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னர் 'யுஜிசி ஒழுங்குமுறை விதிகள் 2016 இன் படி' PhD திட்டங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் நம்பகத் தன்மையை சரி பார்க்க வேண்டும் என்றும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.


Comments

Popular posts from this blog