தமிழக ரேஷன் கடை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு – சூப்பர் அறிவிப்பு !



தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் இப்பணிக்கு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு:


நியாயவிலைக்கடை விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தாலும், கடந்த 5 வருடங்களுக்கு மேலாகியும் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாத காரணத்தாலும் இப்பணிக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் நேர்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது.




ரேஷன் கடை, அங்கன்வாடி பணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால் இதில் லஞ்சம், முறைகேடு நடைபெற்றதால் இந்த நியமன முறையை அரசு தடை செய்தது. எனவே இந்த முறை லஞ்சம் முறைகேடு நடைபெறாத வகையில் இந்த தேர்வு முறைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட அனைத்து தகுதியானவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை பெறப்பட உள்ளது. 




அதன் பிறகு நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணிக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog