மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் ? சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !



மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், 'நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும்.



மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு:


தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதேபோல தேர்வு கட்டணத்தை நவம்பர் 25க்குள் செலுத்த வேண்டும். மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கணினி வழியில், டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம்:


பட்டியல், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு, ஒரு தாளுக்கு, 500 ரூபாயும், இரண்டு தாளும் சேர்த்து எழுத விரும்பினால் 600 ரூபாய், மற்ற பிரிவினர் ஒரு தாளுக்கு, 1,000 மற்றும் இரண்டு தாள்களுக்கு சேர்த்து 1,200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக்கான சரியான தேதி விபரம், தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும்.


 


தேர்வு மையம்:


தேர்வு மையம் அமைய உள்ள நகரை, முன்னுரிமை அடிப்படையில் தேர்வர்கள் குறிப்பிடலாம். விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு மையம் இருக்கும் நகரங்கள் ஒதுக்கப்படும் என்றும், ஒவ்வொரு நகர தேர்வு மையங்களுக்கான தேர்வர்களின் எண்ணிக்கை முடிந்து விட்டால், மீதமுள்ள தேர்வர்கள் வேறு நகரத்தை தேர்வு செய்யவோ, தேர்வு விண்ணப்பத்தை ரத்து செய்யவோ, ஆன்லைனில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog