BVSc & AH: கால்நடை மருத்துவம், பி.டெக். படிப்புகளுக்குக் குறைந்த வரவேற்பு; விண்ணப்பங்கள் சரிவு




கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளில் சேர இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வழங்கி வருகின்றன. இதன்கீழ் மொத்தம் 580 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகள் மொத்தம் 5.5 ஆண்டுகள் (4.5 ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்பு பயிற்சி) காலம் கொண்டவை.


சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை - 120 இடங்கள் 


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 100 இடங்கள்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 100 இடங்கள்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 100 இடங்கள்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு, சேலம் - 80 இடங்கள்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி தேனி- 40 இடங்கள்


கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பண்ணைக்கிணறு, உடுமலைப்பேட்டை - 40 இடங்கள்


உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு 

BTech - Food Technology -(4 ஆண்டுகள்)


உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவளி, சென்னை - 40 இடங்கள்


கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு


BTech - Poultry Technology

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, மத்திகிரி, ஓசூர் - 40 இடங்கள்


பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு


BTech - Dairy Technology (4 ஆண்டுகள்) 


உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவளி, சென்னை - 20 இடங்கள் ஆகிய அரசு இடங்கள் உள்ளன. 


இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளான, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்காண்டுகள் கொண்ட கால்நடை தொழில்நுட்பப் படிப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். 


கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப் படிப்புகளில் சேர 2022- 23ஆம் ஆண்டில் 16,214 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் 18,760 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதாவது கடந்த ஆண்டை விட, இந்த முறை விண்ணப்பங்கள் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. 


*


அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 


வரும் 15-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 18-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: http://tngasaedu.org என்ற இணைய தளத்தைக் காணவும்.

Comments

Popular posts from this blog