LKG, UKG சிறப்பாசிரியர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களே பொருத்தமானவர்கள் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்



எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.


எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளியை சுத்தம் செய்யவதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு முன்னறிவிப்பின்றி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.


கல்வி தொலைக்காட்சிக்கு சாதனைகளை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்க டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரில் உண்மையில்லை. கல்வித்தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப் புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.


LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார். இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே LKG, UKG வகுப்புகளுக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள். மேலும், பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog