SSC CGL: 20 ஆயிரம் பணியிடங்கள்; கால அவகாசத்தை நீட்டித்த எஸ்.எஸ்.சி.! கவலையில்லாமல் விண்ணப்பிக்கலாம்.




பலரும் எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சி.ஜி.எல். (Combined Graduated Level Examination ) பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2022 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.



வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்காதவர்கள் கவலைபட வேண்டாம். இன்னும் மூன்று நாட்கள் நேரம் இருக்கிறது. மறக்காம விண்ணப்பித்துவிடுங்கள்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


Combined Graduate Level Service


காலி இடங்கள்- தோராயமாக 20,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்Microsoft Word - Final_Notice_CGLE_2022_17_09_2022.docx (ssc.nic.in)


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 13-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க)" என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்


தேர்வு தேதி

முதல் தேர்வு- டிசம்பர் மாதம்


இரண்டாம் தேர்வு- பின்னர் தெரிவிக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது


வயது:


18 முதல் 32 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கலவித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf


கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் அறிக்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:


முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

Combined Graduate Level Examination, 2022 Apply என்பதை கிளிக் செய்யவும்

முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும்

ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்

புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்

அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் Microsoft Word - Final_Notice_CGLE_2022_17_09_2022.docx (ssc.nic.in)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி- 13.10.2022


ஆப்லைன் சேலான் பதவிறக்கம் செய்ய கடைசி தேதி - 13.10.2022


ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் - 14.10.2022


டிமாண்ட் டிராப்ட் மூலம் பணம் செலுத்த கடைசி நாள்: 15.10.2022


விண்ணப்ப படிவத்தில் மாற்றம் செய்ய கடைசி நாள் - 19.20.2022 முதல் 20.20.2022 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog