குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு எப்போ தெரியுமா ?



தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.



இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.


 

அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.


இந்த குரூப் 2, 2ஏ தேர்வை எழுத சுமார் 11.78 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9.95 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என ஜூன் மாதம் முதலே தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இதற்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog