2,748 கிராம உதவியாளர் தேர்வு : ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?




தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது.


இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணிகளுக்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அக்டோபர் 10 ஆம் தேதி முதல் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.


5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிறைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணத்தினால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.


இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.



மேலும் கிராம உதவியாளர் பணிகான தேர்வு நுழைவு சீட்டை https://www.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் https://cra.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் மேலும் அந்தந்த மாவட்ட இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog