TNEA 2022: 4ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 54,000 இடங்கள் காலி!



பொதுப் பிரிவு கலந்தாய்வு 4கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக துணை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்விற்கு 10,000 பேர் வரை மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொறியியல் கலந்தாய்வில் 4வது சுற்று முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 54,000 பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.


பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.


பொறியியல் படிப்பை பொறுத்தவரை 448 பொறியியல் கல்லூரிகளில் 1,39, 251 இடங்கள் உள்ளன. இவற்றுள் 85,216 இடங்கள் நிரம்பியுள்ளன.  54,035 இடங்கள் காலியாக இருக்கின்றன. கணினி அறிவியல்,தகவல் தொழில்நுட்பம் ,டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog