தமிழக ரேசன் கடை வேலை; நேர்முகத் தேர்வுக்கு இந்த ஆவணங்கள் முக்கியம்!



தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தநிலையில், நேர்முகத் தேர்விற்கு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்தநிலையில், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (Email ID) அனுப்பப்பட்டுள்ள பதிவெண் விவரங்கள் மூலம் நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு மையம், நேர்காணல் குழு எண், நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?


விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்க்கை அலுவலகம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண் மற்றும் கடவுச் சொல் அனுப்பப்பட்டுள்ளது.


இந்தப் பதிவு எண் மற்றும் கடவுச் சொல் மூலம், நீங்கள் விண்ணப்பித்த அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


இதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு இணையதளத்திற்குச் சென்று, அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


இப்போது உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும். இப்போது நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு உங்கள் திரையில் தோன்றும். அதனை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


தேவையான ஆவணங்கள்


ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், உங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். அதேநாளில் நேர்முகத் தேர்வுக்கு முன்பாக முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எனவே, பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/ HSC Mark sheet), கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்போது, ​​வேலைபார்க்கும் நிறுவனத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் அடையாள அட்டை மற்றும் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.


சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே அன்றைய தினம் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்துக் கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.


Comments

Popular posts from this blog