கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு கேள்விகள் கசிவு? தேர்வர்கள் அதிர்ச்சி




கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மதுரை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 63 கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. 10,000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே ஆங்கில மொழித் திறன் தொடர்பான கேள்விகள் கசிந்ததாக dtnext ஆங்கில நாளிதழ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், கேள்விகளை தெரிந்து கொள்ள ரூ.10,000 வரை பேரம் பேசப்பட்டதாகவும், தேர்வுக்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கேள்விகள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, அதிகாரையைத் தொடர்பு கொண்டு விசாரிக்கையில், தெற்கு மதுரை தாலுகாவில் தேர்வெழுதிய நபர் மீது சந்தேகம் எழுந்ததால், அந்த தேர்வர்கவுக்கு மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், குற்றம் செய்தவர்கள் மீது தக்கப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.


முன்னதாக, கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "எந்தவித விதிமீறலும் இல்லாமல் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும், எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.


 ஆனால், தற்போது தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக செய்தி வந்திருப்பதை தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog